கோயம்புத்தூர்:தமிழ்நாடு முழுவதும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதனை, தமிழ்நாடு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.