தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்கம்மை பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமைக்க வேண்டும்: ஒன்றிய அரசிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை - மா சுப்ரமணியன்

குரங்கம்மை பாதிப்பை கண்டறிய தமிழ்நாட்டில் ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் மா.சு கோரிக்கை
குரங்கு அம்மை பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் மா.சு கோரிக்கை

By

Published : Jul 18, 2022, 11:01 PM IST

கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருக்கும் பன்னாட்டு விமானங்களில் 63 வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவரமாக கண்காணிக்கப்படுகின்றார்கள்.

குரங்கம்மை தடுப்பு பணிகள் குறித்து கோவை விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கோவையில் வெளிநாட்டில் இருந்து இரு விமானங்கள் வருகின்றன. தினமும் 170 பயணிகள் வரை வெளிநாடுளில் இருந்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் ரேண்டமாக சோதனை நடத்தப்படுகின்றது.

இதுவரை ஒருவக்கு கூட கரோனா, குரங்கம்மை கண்டறியப்படவில்லை. விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் உள்ளது. ஒரு படுக்கை அறையும் தயாராக உள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யோகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் மா.சு கோரிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் நாளை முதல் குரங்கம்மை வார்டு செயல்பட துவங்கும் ஐசிஎம்ஆர் 15 ஆய்வகங்கள் மூலம் குரங்கம்மை கண்டறிய ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதில் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கேட்டுள்ளோம். அது வந்தவுடன் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும்.

கேரளா, தமிழ்நாடு இடையே 13 பாதைகளில் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். குரங்கம்மை பாதிப்புகளை ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார். முகம், முழங்கை பகுதிகளில் கொப்புளம் இருந்தால் அவர்களை கண்காணிக்கப்படுகின்றனர்.

கரோனா பாதிப்பு கூட துவங்கி இருக்கின்றது. முகக்கவசம், சானிட்டைசர் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுறுத்தி வருகின்றோம். முதல் தவனை தடுப்பூசி 96 சதவீதமும், இரண்டாவது தவணை 86 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.

வரும் ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகின்றது. ஆயுஷ்மான் பாரத் பணிகளில் தொய்வு என ஒன்றிய நிதி இணை அமைச்சர் சொல்லி இருப்பதில் தெளிவில்லை. இது குறித்து சுட்டிக்காட்டினால் அதை சரி செய்யத் தயார்.

துறை சார்ந்தவர்கள் பாராட்டி இருக்கும் நிலையில் அவர் தெரியாமல் சொல்லி இருப்பார். மக்களின் வீடுகளுக்கு தேடி சென்று மருத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. கடைகோடி மனிதனுக்கும் தமிழ்நாட்டில் சிகிச்சைகள் கிடைக்கின்றது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேருந்தில் மோடி படம் எங்கே?: பாஜகவினர் கலெக்டருடன் வாக்குவாதம்!

ABOUT THE AUTHOR

...view details