கோவை மாவட்டம், சிந்தாமணி பகுதியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இயங்கி வருகிறது. இங்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று (ஜூலை.28) ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இப்பகுதியில் செயல்பட்டுவரும் மருந்தகம், நியாயவிலைக்கடை, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டு, விற்பனை குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடமும் விற்பனை பொருள்களின் தரம் குறித்து வினவினார்.