தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இதுவரை இல்லாத அளவுக்கு ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது’ - அமைச்சர் பெரியசாமி - பிடிஆர் குறித்து ஐ பெரியசாமி

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி
அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி

By

Published : Nov 19, 2022, 8:38 PM IST

கோயம்புத்தூர்: கொடிசியா அரங்கில் நடைபெற்ற 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் மாநில அளவிலான நிகழ்ச்சி அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் செந்தில் பாலாஜி தலைமையில் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டுறவுத் துறை சாதனை மலரை துறை அமைச்சர் ஐ பெரியசாமி வெளியிட மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமியிடம், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ’கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை’, என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

“கரோனா காலத்தில் 4ஆயிரம் ரூபாய் 99.9 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2.13 லட்சம் ரூபாய் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பணம் கொடுத்துள்ளோம். யாரும் பணம் கிடைக்கவில்லை என சொல்லவில்லை.ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகின்றது. அனைத்து பொருள்களும் வழங்கப்படுகின்றது.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.இதுவரை கடத்தலில் 13 ஆயிரம் வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது.நெஞ்சை உயர்த்தி சொல்லுவோம், கடத்தல் என யார் சொன்னாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. செயல்பாடுகளால் அமைதி புரட்சி ஏற்படுத்தபடுகின்றது

கூட்டுறவு துறையில் விரைவில் 6ஆயிரத்து 500 பேர் நியமனம் செய்யப்பட இருக்கின்றோம். அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் அந்த இடங்களில் புதிய கடைகள் அமைக்கப்படும். 10 வீடுகள் இருந்தாலும் அங்கு சென்று பொருட்கள் கொடுக்கப்படுகிறது. மக்கள் யாரும் குறை சொல்லவில்லை. மக்கள் மிக திருப்தியாக இருக்கின்றனர்.

அமைச்சர் ஐ பெரியசாமி அளித்த பேட்டி

இந்தியாவிலேயே பொருட்கள் வழங்குவதில் தமிழ்நாடு முதல் நிலையில் இருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகள் போல வேறு எப்போதும் பணிகள் நடந்ததில்லை. கழிப்பிட வசதியுடன் ரேசன் கடைகள் கட்டப்பட்டு வருகின்றது. குறைபாடுகள் இல்லை. சுட்டிகாட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது

கண்விழித்திரை மூலம் ரேசன் பொருள் வழங்கும் முறை சென்னை, அரியலூர் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறை இருந்தால் சீர் திருத்தம் செய்யப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘நிதியமைச்சராக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை’ - பிடிஆர் வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details