கோயம்புத்தூர்:கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) ஆகியவை இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் இன்று துவங்கியது.
ஜவுளி துறையில் ' தொழில்நுட்ப ஜவுளி ' பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்து இரண்டு நாள் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது.
கடந்தாண்டு முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்ற நிலையில், 2வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், “ ஐவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது, மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஐவுளி பாலிசி விரைவில் வெளியிட போகின்றோம்.
டெக்னிக்கல் டெக்ஸ்டைல்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மாநில அரசு உணர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றது. ஒரு மில்லின் எகனாமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும் என எதிர்பார்க்கிரோம். சேலத்தில் 110 ஏக்கரில் 881 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள ஜவுளி பூங்காவிற்கு மத்திய அரசின் நிதியை பெற்று தர மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடம் வலியுறுத்தியுள்ளோம்.