தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை ஏற்பாடுகள்: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு! - Minister Chakrabani

கோயம்புத்தூர்: சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா சிகிச்சை ஏற்பாடுகள்: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!
கரோனா சிகிச்சை ஏற்பாடுகள்: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!

By

Published : May 15, 2021, 8:32 AM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு அமைச்சர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார். அதன்படி, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்புச் சிகிச்சை வார்டுகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து அங்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

கரோனா சிகிச்சை ஏற்பாடுகள்: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை, கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், வடக்கு வட்டாட்சியர் கோகிலா ராணி ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details