தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கோயில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் - minister chakarabani

கோவையில் 439 கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணத்தொகையையும், நிவாரணப் பொருள்களையும் அமைச்சர் சக்கரபாணி இன்று வழங்கினார்.

கோயில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்
கோயில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்

By

Published : Jun 20, 2021, 5:43 PM IST

கோவை:கோவை மாவட்டத்தில் மாத ஊதியம் இன்றி அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் கோயில் பணியாளர்கள் 439 பேருக்கு 4 ஆயிரம் ரூபாய், கரோனா நிவாரணப் பொருள்களை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று வழங்கினார்.

ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய அவர், "கோவையில் 353 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இதில், 439 பேர் பணியாற்றுகின்றனர்.

முதலமைச்சரின் கரோனா தடுப்புப்பணி

கரோனா காலத்தில் யாரும் பாதிக்கக்கூடாது என கோயில் பணியாளர்களுக்கும், இலங்கை ஏதிலிகளுக்கும் நிவாரணங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கோவைக்கு இருமுறை வந்து கரோனா தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்துள்ளார். மேலும், பிபிஇ கிட் அணிந்து கரோனா நோயாளிகளையும் சந்தித்துப் பேசினார்.

தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருந்த நேரத்தில் சிறப்பு அலுவலரை நியமித்து தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்" என்றார்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சமீரான், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை, திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கோயில் பணியாளர்களுக்குக் கரோனா நிவாரண உதவிகள்!

ABOUT THE AUTHOR

...view details