கோவை:வேளாண் பல்கலைக் கழக கலையரங்கில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பிற்கான கருத்துக்கேட்பு கூட்டம் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அதற்கு முன்னதாக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.