கோவை கே.பி.ஆர். நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மாரத்தான் நடைபெறுவது வழக்கம். இதைத்தொடர்ந்து ஆறாவது ஆண்டாக கணியூர் சுங்கசாவடி பகுதியில் மரங்களை வளர்த்தல், பாதுகாத்தல், காற்று மாசுபடுதலை தவிர்க்கவும் வலியுறுத்தி மரங்களை வளர்ப்போம், மரங்களை காப்போம் என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை கருமத்தம்பட்டி காவல் ஆய்வளர் சண்முகம், கே.பி.ஆர். கல்லூரியின் முனைவர் அகிலா ஆகியோர் கொடியசைத்து தொடங்க்கி வைத்தனர். இப்போட்டியானது 5 கிலோ மீட்டர், 8 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இதேபோல், ஈரோடு சத்தியமங்கலத்தில் உணவுக்கும் உழவுக்கும் உயிரூட்டுவோம் எனும் தலைப்பில் தேசியளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. சத்தியமங்கலம் காமேதனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் செல்லமுத்து கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டி சத்தியமங்கலம் அத்தாணி சாலை, கொமராபாளையம், சதுமுகை வழியாக போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பசுபதி என்பவரும், பெண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த ஆஷா என்பவரும் முதலிடத்தைப் பிடித்தனர்.
இதையும் படிங்க: சாலை விதிகளுக்கான மாரத்தான் போட்டி!