தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ரயில்வேயில் வேலை கிடைத்துவிட்டதாக இளைஞரை நம்ப வைத்த கும்பல் அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளது.

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் புகார்
ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் புகார்

By

Published : Apr 29, 2022, 5:41 PM IST

விழுப்புரம்: அருகே சங்கராபுரத்தை சேர்நத பட்டதாரி இளைஞர் ஶ்ரீஜித் (28). 2018ம் ஆண்டு வேலை தேடி கோவை வந்துள்ளார். கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள (நியூ ஜாப் பிளேஸ்மென்ட் சர்வீஸ்) என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகிய போது அங்கிருந்த முருகா என்பவர் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார். மேலும் இவர் மூலம் வேலைக்குச் சென்றவர் என சில ஆவணங்களை காண்பித்ததாக தெரிகிறது.

இதை நம்பிய ஶ்ரீஜித் கடன் வாங்கி 6 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறிது நாள் கழித்து கொல்கத்தாவில் வேலை கிடைத்துவிட்டதாகவும், பயிற்சி முடிந்தவுடன் பணியில் சேரலாம் எனக்கூறி கொல்கத்தாவிற்கு முருகா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றது மத்திய ரயில்வே துறையின் பணியானை மற்றும் அடையாள அட்டையை வழங்கியுள்ளார். இதையடுத்து அங்கு தனியாக அறையெடுத்து தங்கிய நிலையில் தினமும் யாராவது ஒரு நபர் இவர்களது அறைக்கே வந்து ரயில்வே துறையில் பணியாற்றுவது தொடர்பாக பயிற்சி வழங்கியுள்ளனர்.

இதையடுத்து நீண்ட நாட்களாக ஊதியம் வழங்காமல் இருந்ததாலும், வருகை பதிவேட்டில் கையெழுத்து ஏதும் வாங்காததலும் சந்தேகமடைந்த அவர் இது குறித்து முருகாவிடம் கேட்ட போது அவர் தமிழகத்திற்கு பணிமாறுதல் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என கூறி சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் அதற்கு பின் தொடர்பு கொண்ட போது போனை எடுக்காமல் இருந்ததால் ஶ்ரீஜித் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர் அழைத்து விசாரித்த போது பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு சிறு தொகைகளை மட்டும் கொடுத்த நிலையில் மீண்டும் போனை எடுக்காமலும், பணத்தை கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரித்த போது இதே போல் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் பலர் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மத்திய ரயில்வேயில் வேலை எனக் கூறி போலியாக பணியாணை, அடையாள அட்டை உள்ளிட்ட வழங்கி மோசடியில் ஈடுபட்ட முருகா என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணிடமும் மத்திய அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது குழந்தையுடன் வந்து மனு அளித்தார்.

இதையும் படிங்க:இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details