தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2020, 10:48 PM IST

ETV Bharat / state

உணவு வேண்டாம் ... ஊருக்குத் தான் போகணும்

கோவை: தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி புலம்பெயர்ந்த வடமாநிலத்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

migrant-workers-protest-to-have-to-return-home-in-covai
migrant-workers-protest-to-have-to-return-home-in-covai

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வரும் மக்கள் அனைவரும் தற்போது உள்ள இடத்திலேயே தங்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவினையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துவந்தது.

இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கோவை மாவட்டம் சிவானந்தகாலனி பகுதியில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், அவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்வதாக காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் இரண்டாம் நாளாக ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details