தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டுப்பாளையம் சுவர் விபத்து: நாகை திருவள்ளுவன் மீதான வழக்கு தள்ளுபடி!

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் சுவர் இடிந்த சம்பவம் தொடர்பாக நாகை திருவள்ளுவன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Nagai Thiruvalluvan case dismissed
Nagai Thiruvalluvan case dismissed

By

Published : Dec 9, 2019, 7:30 PM IST

கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். அது தொடர்பாக போராட்டம் நடத்தியதில் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த 17 பேரின் உடல் மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவர்களை வேலை செய்யவிடாமல் திருவள்ளுவன் தடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளுவனை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பக் கோரிய இவ்வழக்கை கோவை ஏழாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மணிகண்டராஜா தள்ளுபடி செய்தார். ஆனால், அவர் மீதான மற்ற வழக்குகளில் பிணை கிடைக்காததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாகை திருவள்ளுவனை சிறைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர்

நீதிமன்ற வளாகத்தில் பேசிய அவர், “பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை, வீடு கட்டித் தரப்படவில்லை. மேலும் தமிழ் புலிகள் கட்சியை தடைசெய்ய வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு காவல் துறையுடன் இணைந்து அடக்குமுறையை கையாள்கிறது. குண்டர் சட்டத்தில் என்னை சிறையிலடைக்க பல பொய் வழக்குகளை காவல் துறை தொடுக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ‘17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல் மனதைக் கரைக்கவில்லை’

ABOUT THE AUTHOR

...view details