தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பையில் கிடந்த உணவை சாப்பிட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் - கோயம்புத்தூர் குப்பையில் கிடந்த உணவை தேடி சாப்பிட்ட மனநலம் குன்றியவர்

கோயம்புத்தூர்: உணவின்றி தவித்த மனநலம் பாதிக்கப்பட்டவர் குப்பையில் வீசப்பட்ட உணவை சாப்பிடும் வீடியோ காட்சி பார்ப்போரை கலங்க செய்துள்ளது.

குப்பையில் கிடந்த உணவை தேடி சாப்பிட்ட மனநலம் குன்றியவர்
குப்பையில் கிடந்த உணவை தேடி சாப்பிட்ட மனநலம் குன்றியவர்

By

Published : Apr 9, 2020, 11:08 AM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்ற பலர் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இவ்வாறு ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் வகையில் சில நல்ல உள்ளம் கொண்ட பொதுமக்கள் ஆங்காங்கே தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையை அடுத்த வடவள்ளி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுப் பொட்டலத்தை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தேடி, அங்கிருந்து உணவை எடுத்து சாப்பிடும் காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்க செய்கிறது.

கோவை மாவட்ட நிர்வாகத்தில் ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் , தினக்கூலிகள், வட மாநிலத்தவர்கள் என உணவு இல்லாமல் தவித்துவரும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க நிறைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுமதி பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் மாநகரத்தின் மையப்பகுதியில் மட்டும் ஒரே நேரத்தில் உணவுகளை கொடுத்துவிடுவதால் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை.

கலங்க வைக்கும் வீடியோ காட்சி

இனிமேலும் இது போன்ற சூழல் நடக்காமல் மாவட்ட நிர்வாகத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கும் ஜீவ காருண்யா விலங்குகள் அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details