கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வன பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வன பணியாளர்கள் விரைந்து வந்தனர். உயிரிழந்தநபர் யானையால் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
அதன் பின்னர், வன பணியாளர்கள் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.