பொள்ளாச்சி ஆனைமலை அருகே தாய் தந்தை இல்லாத 16 வயது சிறுமி தனது சித்தியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். வெளியூரில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த சிறுமி, விடுமுறையில் சித்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, அவரின் சித்தப்பாவான காளிதாஸ் அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஒன்றுகூடி காளிதாஸைப் பிடிக்க முயன்றனர். ஆனால், காளிதாஸ் தப்பியோடிவிட்டார்.
மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா போக்சோவில் கைது - கோவை செய்திகள்
கோவை: ஆனைமலை அருகே தனது 16 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா போக்சோவில் கைது
இதனையடுத்து, சிறுமி புகார் அளித்ததன்பேரில் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளிதாஸைத் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த காளிதாஸை, ஆனைமலை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்த காவல் துறையினர் மகிளா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.