தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு பன்றியை வேட்டையாடிய நபர்கள் கைது - men arrested for hunting at coimbatore

கோயம்புத்தூர்: வெடிகுண்டு வைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய நபர்கள் இருவரை வனத்துறை அலுவலர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

men arrested for hunting at coimbatore
men arrested for hunting at coimbatore

By

Published : Apr 25, 2021, 3:41 PM IST

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், குழிக்காடு ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி (26), மாரிச்சாமி (25) ஆகிய இருவரும் கடந்த 22ஆம் தேதி அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து காட்டுபன்றியை வேட்டையாடியுள்ளனர்.

அதன் கறியை குமார், வெள்ளியங்கிரி, பிரசாந்த், வேலுச்சாமி, மூர்த்தி, அரவிந்த்குமார், கதிர்வேல், கோபால் ஆகியோருக்கு பகிர்ந்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஏப். 24) அந்த கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

காட்டு பன்றி வேட்டையாடப்பட்ட தகவல் வனத்துறையினருக்கு கிடைக்க பெற்றதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர், வனவர்கள், வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் திருமூர்த்தி, மாரிச்சாமியை பிடித்து, வெடிமருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இருவருக்கும் தலா 12,500 ரூபாய் அபராதம் விதித்து காரமடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து மூன்று நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பன்றி கறியை வாங்கிய நபர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க:கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details