கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதிவெறி தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆணவக் கொலைகளைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்! - Dravidar viduthalai kazhagam
கோவை: தமிழ்நாட்டில் தொடரும் சாதிவெறி தாக்குதல்கள், சாதி ஆணவக் படுகொலையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. பெரியார், அண்ணா பெயர்களைச் சொல்லி நடக்கும் ஆட்சியில் இதுபோன்ற சாதிய தாக்குதல்களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆணவக் கொலைகளைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.