தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஜூன் 1ஆம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதியளிக்க வேண்டும்’- மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்! - கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

கோயம்புத்தூர்: ஜூன் 1ஆம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதியளிக்க வேண்டும். இல்லையெனில் தாமாக முன் வந்து ஆட்டோக்களை இயக்குவார்கள் என மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்
செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

By

Published : May 21, 2020, 1:07 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மாதர் சங்கத்தினருடன் இனைந்து மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், அரசு அறிவித்த 52 நாள்கள் ஊரடங்கை சிறப்பாக கடைப்பிடித்தது.

ஆனால், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. அரசு அமைத்த 52 தொழில் நலவாரியங்களில் முக்கியமாக ஆட்டோ, கட்டட தொழிலாளர் நல வாரியத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை. ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்ட நிலையிலும் ஆட்டோக்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு வங்கிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எனவே அரசுக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்ததன்படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5000 ரூபாய் உதவி தொகையை கொடுத்து உதவ வேண்டும்.

அதேபோல் ஜூன் 1ஆம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் அவர்களாக முன்வந்து ஆட்டோக்களை இயக்குவர். எனவே தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்.

செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

அதேபோல் மற்றொரு பிரச்னையாக இருப்பது மாதர் சங்கங்களின் மூலம் பெண்களுக்காக பெறப்பட்ட கடன்களை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டுமென்று பல்வேறு வங்கிகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன. ஊரடங்கு அமலிலிருந்த நிலையில் எவ்வித வேலையுமின்றி தவித்து வந்த நிலையில் தளர்வு அறிவித்த சில நாள்களிலேயே கடன்களை திருப்பி செலுத்துமாறு கூறுவது மிகவும் நெருக்கடியாக உள்ளது.

எனவே கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும். இதையும் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஆட்டோக்களை இயக்க அனுமதி வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details