தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 ஆயிரம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை - corona latest news

கோவையில் பணியாற்றி வந்த மூன்றாயிரம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

north-state-workers-in-kovai
north-state-workers-in-kovai

By

Published : Apr 16, 2020, 5:57 PM IST

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அண்டை மாநிலத்திற்குச் சென்ற மக்கள் அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டம் சரவணம்பட்டி, சிட்கோ உள்ளிட்டப் பகுதிகளில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறது.

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட காவல் துறை சார்பில் மூன்றாயிரம் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் காய்ச்சல், சளி உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வேலையும் இல்ல... பட்டினியால் வாடுறோம்: சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநிலத்தவர்கள்

ABOUT THE AUTHOR

...view details