கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மதிமுக சார்பில் கபசுரக் குடிநீர், முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், கோவை புறநகர் மதிமுக மாவட்டச் செயலாளர் குகன் மில்செந்தில், மறுமலர்ச்சி முரளி ஆகியோர் தலைமை தாங்கினர்.
பொள்ளாச்சியில் கபரசுரக் குடிநீர் வழங்கிய மதிமுகவினர்! - MDMK Party Provides Kabasurak Water In Pollachi
கோவை: பொள்ளாச்சியில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கபரசுரக் குடிநீர், முகக்கவசம் ஆகியவை மதிமுக சார்பில் வழங்கப்பட்டன.
![பொள்ளாச்சியில் கபரசுரக் குடிநீர் வழங்கிய மதிமுகவினர்! MDMK Party Provides Kabasurak Water In Pollachi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:03:58:1596627238-tn-cbe-03-pollachi-mdmk-kapasura-pho-tn10008-05082020145143-0508f-1596619303-76.jpg)
MDMK Party Provides Kabasurak Water In Pollachi
நகரச் செயலாளர் துரை பாய், இளைஞர் அணி துணைச் செயலாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ரவிச்சந்திரன், பீடா ரவி, சுரேஷ், என்.கே. பால மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மாவட்டச் செயலாளர் குகன் மில்செந்தில் கூறுகையில், ”இன்று தொடங்கிய நிகழ்ச்சியில் 300 பேருக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டன. நாள்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை காந்தி சிலை அருகில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.