கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திரு.வி.க நகரில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டுவரப்பட்டு தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பூங்கா இடத்தில் குப்பைக் கிடங்கு; பொதுமக்கள் எதிர்ப்பு! - குப்பை கிடங்கு
கோவை: திரு.வி.க நகரில் பூங்கா அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை
இதற்கு திரு.வி.க நகர் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கு அமைப்பதால் பல்வேறு தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது. "குப்பைக் கிடங்கை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனற்.