தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 30, 2019, 8:03 AM IST

ETV Bharat / state

நிலவில் கனிம வளங்கள் உள்ளதா? மயில்சாமி அண்ணாதுரை பதில்

கோவை: நிலவில் கனிம வளங்கள் உள்ளதா என்பது செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தெரியவரும் என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

mayilsamy-annadurai-talks-about-santhirayan-2-status

சந்திராயன் ஏவுகணையின் முன்னாள் திட்ட இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரைக்குபொள்ளாச்சி ரோட்டரி கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்வியில் மாணவர்கள் குறிக்கோளுடன் எதை நோக்கியும் பயணிக்க முடியும், அதற்கு ஏற்றவாறு கல்விக்கூடங்களில் செயல்முறைக் கல்வியை கற்பிக்க முடியும். அவ்வாறு ஆசிரியர்கள் செயல்முறைகளுக்கு விளக்கம் அளிக்கும்போது மாணவர்கள் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள்.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திராயன்-2வில் உள்ள விக்ரம் ரேடர் நிலவில் எந்த இடத்தில் இறங்குவது, ஆய்வு செய்ய செல்லும் பாதை பாதுகாப்பாக உள்ளதா, எந்த திசையில் செல்வது என்பது குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவில் கனிம வளங்கள் உள்ளதா என்பது செப்டம்பர் 7ஆம் தேதிக்கு மேல் நடைபெறும் ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details