கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்த் பாபுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதியினர், காரில் செல்லாமல் ரேக்ளா வண்டியில் மாடுகளை கட்டிச் சென்றனர்.
இதுகுறித்து ஆனந்த் பாபு கூறும்போது, "ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற போட்டிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக" தெரிவித்தார்.
மாட்டுவண்டியில் புதுமணத் தம்பதியினர் சென்றதை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
மாட்டு வண்டியில் திருமண தம்பதி பயணம் இதையும் படிங்க: திருமணத்தில் சிஏஏவிற்கு எதிராக கையெழுத்திட்ட தம்பதி!