கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மத்திய கயிறு வாரியம். கயிறு தொழில்முனைவோர் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மகாலிங்கபுரம், ரவுண்டானா அருகே உள்ள கயிறுவாரிய அலுவலகத்தில் தொடங்கிய போட்டி கோவை ரோடு, பல்லடம் சாலை வழியாக பி.எ கல்லூரியில் முடிவடைந்தது.
கயிறு வாரியம் சார்பில் மாரத்தான் போட்டி - Rope Board
கோவை: பொள்ளாச்சியில் கயிறு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட தூய்மை இந்தியா மாரத்தான் போட்டியில், ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.
கயிறு வாரியம் சார்பில் மாரத்தான் போட்டி
இந்த போட்டியை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.