தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனைகட்டியில் மாவோயிஸ்ட் கைது

கோவை: ஆனைகட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கைதுசெய்யப்பட்டார்.

maoist-sreemathi-arrest
maoist-sreemathi-arrest

By

Published : Mar 11, 2020, 10:26 AM IST

Updated : Mar 11, 2020, 1:14 PM IST

கடந்தாண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியான மஞ்சகண்டி வனப்பகுதியில் கேரள சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதலில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் வனப்பகுதிக்குள் தப்பியோடினர். அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் நவம்பர் 9ஆம் தேதி மாவோயிஸ்ட் தீபக்கை கைதுசெய்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கோவை மாவட்டம் ஆனைகட்டியில் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருந்தில் தப்பிக்க முயன்ற அவரை ஈரோடு மாவட்ட கியூ பிரிவு காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர், ஈரோடு மாவட்டம் அணைக்கல்பாளையம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவோயிஸ்ட் ஸ்ரீமதி, கர்நாடக மாநிலம் பாலகுடகு மாவட்டம் ஸ்ரீங்கேரி பகுதியைச் சேர்ந்தவர். ஏற்கனவே அவரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கும், துப்புக்கொடுப்பவர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாவோயிஸ்ட் தம்பதியர் போலீசில் சரண்!

Last Updated : Mar 11, 2020, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details