தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடல் தகனம்! - Maoist Karthik's body

கோவை: கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடல் நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கோவையில் மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடல் தகனம்!

By

Published : Nov 14, 2019, 11:19 AM IST

தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த அக்டோபர் 28, 29 ஆம் தேதிகளில் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடி படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்குமிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அதில் தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணன் என்கிற கார்த்திக்கும் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கார்த்திக்கின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவையில் உடலை தகனம் செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் கார்த்திக்கின் உடல் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க...கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details