தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவோயிஸ்ட் தீபக்கை போலி என்கவுண்டர் செய்ய சதித்திட்டம் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு - மாவோயிஸ்ட் தீபக் கைது

கோவை: மாவோயிஸ்ட் தீபக்கை போலி என்கவுண்டரில் கொலை செய்ய சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் திட்டம் தீட்டியுள்ளதாக வழக்கறிஞர் பவானி மோகன் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lawyer bhavani mohan

By

Published : Nov 23, 2019, 1:40 AM IST

கோவை ஆனைகட்டி அருகே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தீபக்கை வழக்கறிஞர் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் பவானி மோகன், "தீபக் மீது காவல்துறையினர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். தீபக்கை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக அனுமதியளித்தும் சிறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் வழக்கறிஞர்களை சந்திக்க விடவில்லை.

உயர் நீதிமன்றத்தின் அனுமதியின் பெயரில் வழக்கறிஞர்கள் கோவை மத்திய சிறையில் தீபக்கை சந்தித்து பேசினோம். தீபக் ஆயுதப் பயிற்சி அளித்ததாக காவல்துறை சொல்வது அப்பட்டமான பொய். அவரை சிறப்பு அதிரடிப்படையினர் பிடித்து கல்லால் அடித்து கை, கால்களை உடைத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலக் காவல்துறையினர் போலி என்கவுண்டரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளோம். தீபக் போலி என்கவுண்டரில் கொல்ல அதிக வாய்ப்புள்ளது. தீபக்கிற்கு பிணை மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது பொய்யானது. கடந்த 2010ஆம் ஆண்டு சுக்மா மாவட்டத்தில் 76 சிஆர்பிஎப் படையினர் கொலை செய்யப்பட்ட வழக்கிற்கும், தீபக்கிற்கும் சம்பந்தமில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details