தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"யாரையும் உதாசீனப்படுத்த மாட்டோம்" - தேமுதிகவுக்கு சிக்னல் கொடுக்கும் வானதி..! - தேமுதிக

மணிப்பூர் விவாகரம் மனித நாகரிகத்திற்கு எதிரான செயல், அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

"யாரையும் உதாசீனப்படுத்த மாட்டோம்" - தேமுதிகவுக்கு சிக்னல் கொடுக்கும் வானதி..!
"யாரையும் உதாசீனப்படுத்த மாட்டோம்" - தேமுதிகவுக்கு சிக்னல் கொடுக்கும் வானதி..!

By

Published : Jul 22, 2023, 6:46 PM IST

Updated : Jul 22, 2023, 8:41 PM IST

கோவை:கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வானதி சீனிவாசன் அரசியலை தாண்டி பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறினார். கோவை மாவட்டத்தில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி பங்கு பெற்றார். அவர் தலைமைதாங்கி இளைஞர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''CBSE மாணவர்களுக்கு பிராந்திய மொழி படிக்க இயலும் என்ற உத்தரவு நேற்று வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் அரசு பாஜக அரசு'' எனவும் கூறினார்.

மணிப்பூர் விவகாரத்தை (Manipur Violence) பற்றி பேசிய அவர், இது மனித நாகரிகத்துக்கு எதிரான செயல் எனவும், சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் கூறினார். மேலும் அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கூறிய அவர் மணிப்பூர் மாதிரியான பிராந்தியங்களில் அமைதியற்ற சூழலில் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்: 5வது குற்றவாளி கைது!

அன்றாட சண்டை வந்தால் கூடப் பெண்களை வைத்து பிரச்னை செய்யும் மனப்பாங்கு சமூகத்தில் மாற வேண்டும் எனவும், அரசியலை தாண்டி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு அரணாக இருக்கும் என்று கூறிய அவர் நாடாளுமன்றத் தேர்தல் வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு வெளியே வரும் எனவும் கூறினார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி போல, தேர்தல் சமயத்தில் இன்னும் பலர் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் எனவும், தேமுதிக உட்பட எந்தக் கட்சியையும் பாஜக உதாசீனப்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூர் வீடியோ (Manipur Video) சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கக்கூடாது என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், மணிப்பூருக்காக பேசும் காங்கிரஸ் கட்சி அக்கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

கட்சி வேறுபாடின்றி இந்தியாவில் எந்தப் பெண்ணிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும்; பாஜக அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சியினர் பாஜகவினருடன் இணைய உள்ளதாகவும், பாஜகவின் கூட்டணியை விரும்புவர்கள் தனி மனிதராக இருந்தாலும் சேர்த்து கொள்வோம் எனவும் கூறினார்.

வேங்கைவயல் விவகாரத்தில் (Vengaivasal Issue) ஏன் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என கேள்வியெழுப்பிய அவர், சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கைவயல் போன்ற சம்பவங்கள் கரும்புள்ளி தான் எனக் குற்றம்சுமத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'வங்கி மோசடிகளுக்கு' காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

Last Updated : Jul 22, 2023, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details