தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மங்களூர் ஆட்டோ வெடி விபத்து - உதகையைச் சேர்ந்தவரிடம் விசாரணை - ஷாரிக் மீது ஏற்கனவே NIA வழக்கு பதிவு

மங்களூருவில் நேற்று (நவ-19) நடந்த ஆட்டோ வெடி விபத்து தொடர்பாக உதகையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Etv Bharatமங்களூர் ஆட்டோ வெடி விபத்து- உதகையை சேர்ந்தவரிடம்  விசாரணை
Etv Bharatமங்களூர் ஆட்டோ வெடி விபத்து- உதகையை சேர்ந்தவரிடம் விசாரணை

By

Published : Nov 20, 2022, 7:26 PM IST

கோயம்புத்தூர்:கர்நாடக மாநிலம், மங்களூருவில் நேற்று (நவ-19)ஆட்டோ ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்த நபர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது திட்டமிட்டத் தாக்குதல் என்பது தெரியவந்தது. கா்நாடக மாநில டிஜிபி தனது ட்விட்டர் பதிவில், அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோவில் பயணித்த நபர் கர்நாடக மாநிலத்தைச்சேர்த்த ஷாரிக் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து போலியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர் பயன்படுத்தும் சிம் கார்டு உதகையைச்சேர்ந்த சுரேந்தர் என்பவரது, ஆதார் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கர்நாடக மாநில போலீசார், உதகை போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து உதகை போலீசார் நேற்று இரவு குந்தசப்பை என்ற பகுதியில் உள்ள சுரேந்தரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

இதனையடுத்து உதகை சுரேந்தரும், தாக்குதலில் காயமடைந்த ஷாரிக் என்ற நபரும் கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு லாட்ஜில் சில மாதம் முன்பு தங்கி இருந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருக்குமான தொடர்புகுறித்து உதகை போலீசார் சுரேந்தரை கோவை அழைத்துவந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்புச்சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கர்நாடகாவைச்சேர்ந்த ஷாரிக் மீது ஏற்கெனவே NIA வழக்குப்பதிவு செய்து இருப்பதும் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்தவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவத்தில் வேறு நபர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் உதகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை போலீசாருக்கு துணையாக கோவை போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மங்களூரு குண்டுவெடிப்பு... எனது மகன் அப்பாவி, ஆதார் அட்டையை தொலைத்து 6 மாசமாகிறது... பெற்றோர் வாக்குமூலம்...

ABOUT THE AUTHOR

...view details