மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி, கணவர் இறந்த நிலையில் தனது மகளுடன் தனலட்சுமி வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய நபர் தனலட்சுமியிடம் தவறாக பேசியுள்ளார்.
கணவனை இழந்த பெண்ணை சித்ரவதை செய்த நபர் - உறவினர்களால் அடித்துக் கொலை! - crime news tamilnadu
கோவை: கணவனை இழந்த பெண்ணுக்கு தினமும் போன் செய்து சித்ரவதை கொடுத்த நபரை, அப்பெண்ணின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்தனர்.
தொடர்ந்து அடிக்கடி போன் செய்து இதேமாதிரி பேசிய அந்த நபர், தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதுகுறித்து தனலட்சுமி தனது உறவினரான லட்சுமணனிடம் தெரிவித்துள்ளார். இதனை சரிகட்ட அந்த அலைபேசி நபரை சாமர்த்தியமாக அழைத்து வந்து மிரட்ட திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில், அந்த நபர் தனலட்சுமிக்கு போன் செய்து பார்க்க வருவதாக கூறியுள்ளார்.
இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த தனலட்சுமி, அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த தனலட்சுமியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அந்த நபரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரை வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார், இது குறித்து விசாரனை நடத்தியதில் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோவை ரத்தனபுரி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பதும், அவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.