கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் வசிப்பவர் நவீன் குமார். இவர் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய, பழைய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு கரோனவை ஒழிப்போம் பலகை ஏந்தி 1000 முகக்கவசங்களை வழங்கினார். இவரின் வித்தியாசமான விழிப்புணர்வை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
பிறந்தநாளுக்கு முகக்கவசம் கொடுத்து அசத்திய நபர்! - Coimbatore district news
கோவை: பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் வசிக்கும் நபர் தனது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுத்து அசத்தியுள்ளார்.
நவீன்
இதுகுறித்து நவின்குமார் கூறுகையில், ”ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளித்துவருவது வழக்கம். இந்தமுறை கரோனா வைரஸ் காரணமாக மக்கள் சிரமப்படுவதால் ஆயிரம் முகக்கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.