பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சேத்துமடை டாப்சிலிப் மலையடிவார பகுதியாகும். இங்கு கடமான், புள்ளிமான், காட்டு மாடு, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியதால் கேரள வனப் பகுதியில் வறட்சியின் காரணமாக யானை கூட்டங்கள் நீர் நிலைகளை தேடி வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடர்ந்த வனப்பகுதியான பூங்கன் ஓடை போத்தமடை பீட்டில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அப்பகுதியில் காட்டு ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வனத்துறை அலுவலர் மாரிமுத்து, ரேஞ்சர் காசிலிங்கம், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பிரத பரிசோதனை செய்தனர்.
யானைகளுக்கிடையே நடந்த மோதலில் ஆண் யானை பலி - male elephant
பொள்ளாச்சி : சேத்துமடை வனப்பகுதியில் காட்டு யானைகளுக்குள் நடந்த மோதலில் ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
ஆண் யானை பலி
இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், "கடந்த சில நாட்கள் முன்பு காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் காட்டு யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் உடலில் இருந்த இரண்டு தந்தங்களை அகற்றி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது" என்றார்.