தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்' - மநீம தலைவர் கமல்ஹாசன் - makkal needhi maiyam party leader kamalhassan

கோவை: சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை
கோவை

By

Published : Jan 13, 2021, 1:34 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், " தொழில் துறை 7 வாக்குறுதிகளான புத்தகம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகள் துறை நிறுவப்பட வேண்டும், தொழில் துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வலுப்படுத்துதல், குறைந்த வளர்ச்சி உள்ள பகுதிகளில் மேம்பாடு, அமைப்பு சாரா தொழிலாளர் வலுப்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படுதல், வளர்ச்சிக்கான தொழில் துறையில் முதலீடு திட்டம் ஆகியவற்றை அறிவித்தார்.

ஐந்தாம் கட்ட பரப்புரையில் பொதுமக்களிடம் பேரெழுச்சியை பார்த்தது சந்தோஷமாக உள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினரும் கிடையாது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியது அவரது பிரார்த்தனை எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது. கூட்டணி குறித்து தற்பொது முடிவு சொல்ல முடியாது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு அது தகவல் தான் நான் சொல்லவில்லை" என்று தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், “பொது தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை எடுத்தீர்களா என்று கேட்டபொழுது, வேட்பாளர்களை தகுதி பார்த்து நிறுத்துவோம்” என்றார்.

வேளாண் சட்டத்திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த அவர் நியமிக்கப்பட்ட குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாங்கள் தாமதிக்கப்பட்ட நீதி ஆக பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details