கோவை:மக்கள் நதீ மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 13ஆம் தேதி பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார். இதையொட்டி, அக்கட்சியின் நிர்வாகிகள் பொள்ளாச்சி நகரமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், திருப்பூர் சாலை கோட்டாம்பட்டி பகுதியில் சுவர் விளம்பரம் செய்ய முயன்ற மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அலுவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகி பேட்டி இது தொடர்பாக பேசிய மநீம நிர்வாகிகள், மற்ற கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யும்போது தடுக்காத அலுவலர்கள், நாங்கள் செய்யும்போது மட்டும் தடுக்கின்றனர் என்றும் அரசியல்வாதிகளின் பேச்சைக்கேட்டு நெடுஞ்சாலைத் துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினர். மேலும், எவ்வளவு தடைகள் போட்டாலும் எங்கள் பணி தொடரும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:’ரஜினியின் அறிவிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை’: மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ்