கோயம்புத்தூர்:கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், கடந்த மே 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.
பின்னர், காசி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்குச் சென்று விட்டு நேற்றைய முன்தினம் (ஜூன் 7) இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அதிகாலை 4 மணியளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே நின்றபோது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்துள்ளனர். அப்போது சிலரின் உடமைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், அதிகாலை 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவர், ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்துள்ளது. மேலும், இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களுக்கு சென்றோம்.