தமிழ்நாடு முழுவதிலும் லாட்டரி சீட்டுகள் விற்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள சோலையார், முடீஸ், கேரளா எல்லைப் பகுதிகளில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது - லாட்டரி சீட்டு
கோவை: வால்பாறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் முடீஸ் பஜாரில் வால்பாறை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பெரியசாமி, ராஜூ ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.