கோயம்புத்தூர்:ஹைதராபாத்தில் இருந்து பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கருமத்தம்பட்டி மேம்பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளானதில் திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த லாரியின் ஓட்டுநர் பிரவின் மற்றும் மற்றொருவர் லாரியிலிருந்து குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் விபத்துக்குள்ளான லாரியில் பற்றிய தீ, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு பரவியதால், மேம்பாலம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.