கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகேயுள்ள மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதம்ஷா. இவர் கோவை பட்டனம் பகுதியில் இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து நேற்று இரவு கோவை திரும்பிய அவர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பக்கவாட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 சவரன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.