ஆகஸ்ட் இரண்டாம் தேதி அங்கோடா லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் அமானி தான் ஜி, சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் எட்டாம் தேதி அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி அவர்கள் மூன்று வாகனங்களில் தனித்தனியாக இன்று (ஆகஸ்ட் 12) கோவை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் நீதிமன்ற வளாகம் முன்பு பலத்த காவல் துறையினர் பாதுகாப்புப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.