கோவை மாவட்டத்தில் இன்று(ஜூலை 25) மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார்.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஐந்து மணிவரை செயல்பட்டன. காய்கறி மார்க்கெட்டு, உழவர் சந்தைகள் போன்ற பல இடங்களில் காலை முதல் கூட்ட நெரிசல் ஆனது தென்பட்டு வந்தது.
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ஊரடங்கு அமலாக்கப்பட்டது. தொடர்ந்து நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரே நேரத்தில் வீடு திரும்பினர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.