இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்கும் பணிகள் நவம்பர் 30இல் தொடங்கி, ஜூலை 2ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையமானது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தெரிவித்திருந்தது. எனவே எதன் அடிப்படையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற ஐயப்பாடு எழுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தலை எவ்வாறு தவிர்ப்பது என இந்த அரசாங்கம் காரணத்தை தேடிக்கொண்டு அலைகின்றது. நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து, ஏன் நடத்தவில்லை என கேள்வி கேட்டுவரும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்.