கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட சின்னேரிபாளையம், ரங்கம்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்பு அவர் பேசுகையில், “அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறப்பதற்கு விமர்சனம் செய்யும் ஸ்டாலின் அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்டது குறித்து பேசினால் அவரது முகத்திரை கிழிந்துவிடும்.