மே 1 தொழிலாளர் தினம், மே 2 வாக்கு எண்ணிக்கை தினம் ஆகியவற்றையொட்டி மதுபான கடைகள் மூடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 30) மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர்.

அந்தவகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் ஒதிமலை சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மதுப்பிரியர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்தால் ஒருவருக்கு அதிகபட்சமாக நான்கு மதுபான பாட்டில்களே வழங்கப்பட்டன. மதுபானங்கள் இன்று (மே 1) வாங்கினால் அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என அங்கிருந்த மதுப்பிரியர்கள் கூறினர்.