மத்திய அரசு பட்ஜெட்டில், எல்ஐசி வைத்திருக்கின்ற பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு செய்தனர். இந்த வேலை புறக்கணிப்பு கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல எல்ஐசி சங்கங்களின் இணைச் செயலாளர் சுரேஷ், ”மத்திய அரசு பட்ஜெட்டில், எல்ஐசி சார்பாக உள்ள பங்குகளை பங்குச்சந்தையில் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு நஷ்டங்களை மக்களும் எல்ஐசி ஊழியர்களும் சந்திக்க நேரிடும்.