தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாடுகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி - People request to catch leopard

கோவை: வால்பாறையில் சிறுத்தைப்புலி தொடர்ந்து ஒரே பகுதியில் மூன்று மாடுகளைக் கொன்று தின்றதால், கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று மாடுகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி
மூன்று மாடுகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி

By

Published : May 9, 2020, 1:39 AM IST

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கடந்த மாதம் ஏப்ரல் 18ஆம் தேதி வாசுகி என்பவரின் மாட்டை சிறுத்தைப்புலி அடித்துக் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் அதே பகுதியில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி மாடசாமி என்பவரின் மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாட்டை சிறுத்தைப்புலி கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றது. தற்போது மறுபடியும் அவரது மற்றொரு மாட்டைக் கொன்று தின்றுள்ளது.

இதுபற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். கால் தடங்களை வைத்து பார்த்த பொழுது மாட்டை சிறுத்தைப் புலி கொன்றது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் மாட்டை சிறுத்தைப்புலி கொன்று தின்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதியில் வனத்துறையினரால் கண்காணிப்பு கேமரா, வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து தெரியப்படுத்த எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அதனை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மூர்த்தி (ACF) சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை பலப்படுத்தி உத்திரவிட்டனர்.

இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: ரூ 1.5 லட்சம் வழங்கிய அண்ணன், தங்கை!

ABOUT THE AUTHOR

...view details