தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆள்கள் நடமாடும் தோட்டத்தில், நாயை அடித்துக் கொன்ற சிறுத்தை! - கோவையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் விவசாயி ஒருவரின் தோட்டத்துக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விவசாயி
விவசாயி

By

Published : Apr 6, 2022, 3:10 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் ஓட்டகரடு என்ற இடத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எட்டு ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. இதனையடுத்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் புளியங்கண்டியை சேர்ந்த விவசாயி ராசு என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த நாயை சிறுத்தை அடித்து கொன்றது. இதனையடுத்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் சோதனை மேற்கொண்டதில் சிறுத்தை நடமாட்டத்திற்கான கால்தடம் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் கேமரா மற்றும் கூண்டு வைக்கப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். ஊர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். விரைவில் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: அவிநாசி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை: 2 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்கள்...சிக்குமா சிறுத்தை ?

ABOUT THE AUTHOR

...view details