கோவை வனச்சரகத்துக்குள்பட்ட மருதமலை பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கணபதி நகர் குடியிருப்புப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்துவருகிறது. இந்தச் சிறுத்தை அப்பகுதியில் உள்ள பாறை ஒன்றில் ஓய்வெடுப்பது தொடர்ந்து வருகிறது.
குடியிருப்பு அருகே சிறுத்தையைப் பார்த்த அப்பகுதியினர் அதனைத் தங்களது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தச் சிறுத்தை கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கணபதி குடியிருப்பு அருகே உள்ள பட்டியில் இருந்த மாடுகளை வேட்டையாட முயன்றுள்ளது.