தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை, வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு - Leopard Death

கோவை: வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனவிலங்குகள் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

leopard_ death
leopard_ death

By

Published : Feb 2, 2020, 3:07 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இதில் வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, புலி, சிறுத்தை போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில், வால்பாறை சேக்கல்முடி எஸ்டேட் அருகே உள்ள தேயிலை தோட்டம் பகுதியில் நேற்று 2 வயது சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட எஸ்டேட் நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து, வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டனர். பின்னர் சிறுத்தையின் உடலை மீட்டு வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று உடற்கூறாய்வு செய்தனர்.

மேலும் சிறுத்தை பலியானது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

சமீப காலமாக, வால்பாறையில் சிறுத்தைகள் மர்மமான முறையில் இறந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இரண்டு நாட்களுக்குமுன்பு முள்ளம்பன்றி சிறுத்தை இடையே ஏற்பட்ட சண்டையில் முள் குத்தி மூன்று வயது சிறுத்தை ஒன்று இறந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: தெருவின் நடுவே சிதிலமடைந்துள்ள கிணற்றை மூட மக்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details