கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கருமலை எஸ்டேட் பகுதியில் வனராஜ் என்பவரது மாட்டினை சிறுத்தைப் புலி அடித்துக் கொன்ற நிலையில் நேற்று மீண்டும் இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பாலகிருஷ்ணன் என்பவரது மாட்டினை அடித்துக்கொன்று தின்றுள்ளது.
இதையடுத்து, வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு மாட்டை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.