தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சூயஸ் திட்டம் அருமையான திட்டம்' - உளறிக் கொட்டிய லியோனி... குழம்பிய உ.பி.க்கள்! - சூயஸ் திட்டம் திமுக நிலைப்பாடு

கோயம்புத்தூர்: சூயஸ் திட்டம் கொண்டுவரக் கூடாது என திமுகவினர் பலமுறை எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அதனை அருமையான திட்டம் என பரப்புரையின்போது அக்கட்சியின் பேச்சாளர் லியோனி கூறியுள்ளார்.

பேச்சாளர் லியோனி
பேச்சாளர் லியோனி

By

Published : Mar 23, 2021, 6:17 PM IST

எதிர் வரும் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பேச்சாளர் லியோனி குனியமுத்தூரில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

’தற்போது எடப்பாடி பழனிசாமி லேகியம் விற்பவர்போல புலம்பிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இருக்கும்போது எடப்பாடி பரப்புரை மேற்கொண்டு பார்த்துள்ளீர்களா?

ஜெயலலிதா இருக்கும்போது காலில் விழுவது, கமிஷனை கொண்டுபோய் தருவது மட்டும்தான் அமைச்சர்களின் வேலையாக இருந்துவந்தது. சசிகலாவின் காலில் விழுந்ததை அனைவரும் அறிவர். அப்படியிருக்கும்போது காலில் விழ மாட்டோம் எனக் கூறுகிறார்.

சூயஸ் திட்டம் அருமையான திட்டம். சிறுவாணி தண்ணீரை சூயஸ் திட்டத்தின் மூலம் கொண்டுவரத் தடையாய் இருப்பது எஸ்.பி. வேலுமணி’

இவ்வாறு பேசினார்.

பேச்சார் லியோனி பரப்புரை

சூயஸ் திட்டம் கொண்டு வரக்கூடாது எனத் திமுகவினர் பலமுறை எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அதனை அருமையான திட்டம் என அக்கட்சியின் பரப்புரையின்போது பேச்சாளர் லியோனி கூறியுள்ளது திமுக ஆதரவாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:திமுக வேட்பாளர் டம்மி பீஸ் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ABOUT THE AUTHOR

...view details